என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்னி பஸ் மோதியதில் மாணவிகளின் சைக்கிள் நொறுங்கி கிடக்கும் காட்சி. (உள்படம்- பலியான மாணவி பேச்சியம்மாள்)
    X
    ஆம்னி பஸ் மோதியதில் மாணவிகளின் சைக்கிள் நொறுங்கி கிடக்கும் காட்சி. (உள்படம்- பலியான மாணவி பேச்சியம்மாள்)

    நாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இன்று காலை ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள்கள் பேச்சியம்மாள் (வயது17). ராமலட்சுமி (15). இவர்கள் தளபதி சமுத்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் இசக்கியம்மாள் (17). இவர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்கள் 3 பேரும் தினமும் ஆழ்வார்குளத்தில் இருந்து தளபதி சமுத்திரத்திற்கு சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இன்று வழக்கம் போல் அவர்கள் பள்ளிக்கு சென்றனர். தளபதி சமுத்திரம் அருகே உள்ள நம்பியாற்று பாலத்தில் செல்லும் போது எதிரே சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்து மாணவிகள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணவிகள் 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×