என் மலர்
செய்திகள்

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி- தினகரன் வழங்கினார்
பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #dinakaran #dharmapurigirl #molestation
கம்பைநல்லூர்:
அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் மாணவியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். #dinakaran #dharmapurigirl #molestation
Next Story






