என் மலர்

    செய்திகள்

    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
    X

    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நிலக்கோட்டை:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோட்டார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி மகன் பாண்டியராஜன் (வயது32). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கோவை 4-வது பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். 
    இவருக்கும் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்த கஜேந்திரன் மகள் கவுசல்யா (21) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 75 பவுன் நகை, ரூ.2 லட்த்திற்கான சீர்வரிசை பேசப்பட்டு இதில் சீர்வரிசை மற்றும் 45 பவுன் நகை கொடுக்கப்பட்டுள்ளது. 

    தற்போது பாண்டியராஜன் தனது மனைவியிடம் மேலும் 30 பவுன் நகை வாங்கி வருமாறு வற்புறுத்தி உள்ளார்.

    மேலும் பல்வேறு வகைகளில் தன்னை துன்புறுத்தியதாக கவுசல்யா நிலக்கோட்டை கோர்ட்டில் புகார் மனு அளித்துள்ளார். மாஜிஸ்திரேட் ரிஸ்னாபர்வீன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி இது குறித்து பாண்டியராஜன், அவரது தந்தை பாண்டி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×