search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி அருகே செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

    போச்சம்பள்ளி அருகே செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MoneyRobbery
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பூசாரியாக பழனி என்பவர் இருந்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் கோவிலை திறந்து பூஜை செய்து விட்டு வருவார்.

    நேற்று வழக்கம் போல் காலை, மாலை நேரங்களில் பூஜை செய்து விட்டு இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் இன்று காலை வந்து பார்த்தபோது நேற்றிரவு மர்ம நபர்கள் கோவில் இரும்பு கேட்டை உடைத்தும், கோவில் உண்டியலை கடப்பாறையால் நெம்பி பூட்டை உடைத்து கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றிருக்கின்றனர். கோவில் உண்டியலில் சுமார் 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருக்கின்றனர். மேலும் உண்டியலில் நாணயங்களை அப்படியே சிதறி போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் உடனே ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்வையிட்டனர்.

    இது குறித்து பாரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கொள்ளையர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #MoneyRobbery


    Next Story
    ×