என் மலர்

    செய்திகள்

    கொலை நடந்த வீட்டின் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் (உள்படம் கொலையுண்ட கோபால்)
    X
    கொலை நடந்த வீட்டின் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் (உள்படம் கொலையுண்ட கோபால்)

    மணலியில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணலியில் இன்றுகாலை வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    மணலி அடுத்த சின்ன சேக்காடு, பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 55). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 6 மணி அளவில் கோபால் அருகில் உள்ள கடையில் செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். வீட்டு முன்பு வந்தபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார்.

    திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலை சரமாரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    உடனே மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோபாலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே கோபால் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட கோபாலுக்கு மீனாட்சி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகிலா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று காலை கொலை நடந்த போது வீட்டின் உள்ளே கோபாலின் மனைவி மற்றும் மகன், மகள் இருந்தனர். கொலையுண்ட கோபாலின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கோபால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார் என்று தெரியவில்லை. வேலை பார்த்த இடத்தில் அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×