என் மலர்

  செய்திகள்

  கடையநல்லூரில் தொழிலாளி அடித்துக்கொலை? - போலீசார் விசாரணை
  X

  கடையநல்லூரில் தொழிலாளி அடித்துக்கொலை? - போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையநல்லூர் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கடையநல்லூர்:

  கடையநல்லூர் அருகே உள்ள கம்பநேரியை சேர்ந்தவர் அழகுதுரை. இவரது மகன் மணிகண்டன்(வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கும் புளியரையை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று மணிகண்டன் தனது பைக்கில் கடையநல்லூரில் இருந்த கம்பநேரிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சேர்ந்தமரம் சாலையில் சென்ற போது எதிரே மணிமுத்தாறில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அழகுதுரை என்பவரது மகன் பிரேம்குமார் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

  இதில் லேசான காயமடைந்த இருவரும் தங்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று பிரேம்குமார் தனது நண்பர்களுடன் மணிகண்டன் வீட்டிற்கு சென்று இது தொடர்பாக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரேம் குமார், நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் புளியரையில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து மணிகண்டனின் தந்தை அழகுதுரை கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ஞான ரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்தாரா அல்லது அடித்து கொல்லப்பட்டாரா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே உண்மையான நிலை தெரியவரும்.
  Next Story
  ×