என் மலர்
செய்திகள்

அமெரிக்காவில் நாளை உலக இந்து சமய மாநாட்டில் வானதி சீனிவாசன் பேசுகிறார்
உலக இந்து சமய மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
கோவை:
உலக இந்து சமய மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது. சுவாமி விவேகானந்தர் இந்து சமயம் பற்றி சொற் பொழிவாற்றியதன் 125-ம் ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இந்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பாரதீய ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்கிறார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், விவேகானந்தர் உரை நிகழ்த்திய இடத்தில் சொற்பொழி வாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாட்டின் 2-ம் நாள் ‘இந்து சமயத்தில் எழுச்சிமிகு பெண்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன் என்றார்.
Next Story






