search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 5 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான 5 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனையும் படத்தில் காணலாம்.

    மதுரவாயல் பகுதியில் செல்போன் பறிக்கும் கும்பல் சிக்கியது

    மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல், துண்டலம் தாஸ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். கார்பெண்டர். கடந்த 31-ந்தேதி அவர் செட்டியார் அகரம் கீரை தோட்டம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த 5பேர் கும்பலில் ஒருவன் சதிஷிடம் சென்று ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி செல்போனை கேட்டார். உடனே சதிஷ் தனது செல் போனை அந்த நபரிடம் கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் கழித்து செல்போனை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை தடுக்க முயன்ற சதீசை அவர்கள் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் முதுகு, மூக்கில் படுகாயமடைந்த சதிஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தப்பி சென்ற கும்பலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வழிப்பறி கும்பல் மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சிவா, விஷ்ணு, கிரிதரன், ராஜேஷ், குன்றத்தூர் புதுவட்டாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், திருட்டிற்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×