என் மலர்

  செய்திகள்

  பதவி சுகத்துக்காக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் - தங்கதமிழ்செல்வன்
  X

  பதவி சுகத்துக்காக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் - தங்கதமிழ்செல்வன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பதவி சுகத்துக்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் என்று அ.ம.மு.க. கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #Thangatamilselvan
  திண்டுக்கல்:

  ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.

  எங்கள் கட்சி கூட்டத்துக்கு சேரும் மக்களை பார்த்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மிரண்டு போய் உள்ளனர். அதன் காரணமாகவே பல்வேறு கெடுபிடிகளை விதித்து கூட்டம் நடத்த தடை எற்படுத்தி வருகின்றனர்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் தற்போதுதான் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அதனை கூறி வருகின்றன.

  18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan

  Next Story
  ×