search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பா.ஜனதா என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய ஸ்டாலின், தலைவராக வருவது தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றதில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்ன என்றால் கர்நாடகத்திடம் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவது மட்டும் தான்.

    அந்த தண்ணீரை சேமிப்பதா? அல்லது கடலில் கலக்க விடுவதா? பாசனத்துக்கு விடுவதா? என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியாக. முதல்நிலை கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    Next Story
    ×