search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 பேர் பயணம் செய்யும் நீளமான மோட்டார் சைக்கிள்- ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
    X

    15 பேர் பயணம் செய்யும் நீளமான மோட்டார் சைக்கிள்- ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

    கொளத்தூரில் 70 மாணவர்களின் முயற்சியால் 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
    மாதவரம்:

    நவீன அறிவியலும் தற்போதைய வாழ்க்கை முறையும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டது.

    தற்போது உள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் புதிது புதிதாக தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் பகுதியில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் தயாரிக்கபட்டுள்ளது.

    கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 70 மாணவர்கள் கடந்த 8 மாதங்களாக செய்த கடும் முயற்சிக்கு பின்னர் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய ரூ. 1½ லட்சம் செலவாகி இருக்கிறது.

    இந்த மோட்டார் சைக்கிள் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. இதற்கான விழா நடைபெற்றது. இதில் இதற்கான சான்றிதழ்களை முறைப்படி அதிகாரிகள் வழங்கினர்.

    இந்த வாகனம் மக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்க படவில்லை. மாணவர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தவும் சாதனைக்காகவும் மட்டுமே இந்த இரு சக்கர வாகனம் வடிவமைக்கபட்டது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    உலகத்திலேயே மிக நீளமான சுமார் 6.8 மீட்டர் நீளம் 1.2 மீட்டர் அகலம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் ட்டூவீல் டிரைவ் தன்மை கொண்டது. 12 குதிரை திறன் கொண்ட பெட்ரோல் என்ஜீன், 2 குதிரை திறன் கொண்ட எலக்ட்ரிகல் என்ஜீன் மற்றும் 1500 வாட்ஸ் சிலிக்கான் செல் பேட்டரி கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

    ஏற்கனவே பயன்படுத்தபடும் பழைய மோட்டார் சைக்கிள்களின் பாகங்களை கொண்டும் அதை தேவைக்கேற்ப மாற்றியமைக்கபட்டும், ஒருசில பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டும் தயாரிக்கபட்டது.

    அடுத்த கட்டமாக இந்த வாகனம் கின்னஸ் சாதனையில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். 10-க் கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×