என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனை- கீதாஜீவன் எம்எல்ஏ ஏற்பாடு
    X

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனை- கீதாஜீவன் எம்எல்ஏ ஏற்பாடு

    திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. #karunanidhi #dmk
    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர் நலம்பெற வேண்டி பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ உத்தரவிற்கிணங்க கருணாநிதி நலம் பெற வேண்டி தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கருணாநிதி நலமுடன் வாழ வேண்டி பனிமயமாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்து மாதா சொரூபத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக் கனி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் டென்சிங், ஹாட்லி, சாரதி, முன்னாள் கவுன்சிலர் பாலன், வட்டப்பிரதிநிதி சுப்பையா, மாதா கோவில் பொருட் காட்சி குழு சார்பில் தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா ஆகியோர் மதிய உணவு வழங்கினார்கள். #karunanidhi
    Next Story
    ×