search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-சித்தூருக்கு பசுமை வழிச்சாலை - புலிக்குன்றம் வனப்பகுதி அழிக்கப்படுகிறது
    X

    சென்னை-சித்தூருக்கு பசுமை வழிச்சாலை - புலிக்குன்றம் வனப்பகுதி அழிக்கப்படுகிறது

    ரூ 3200 கோடி செலவில் சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி புலிக் குன்றம் வன்பகுதி அழிக்கப்படுகிறது. #Greenwayroad

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து சார்பில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது. விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் இந்த சாலைக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அனைத் தையும் மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை பசுமை வழிச் சாலை அமைத்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை - சித்தூருக்கு ரூ. 3,200 கோடி செலவில் பசுமை வழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 126 கிலோ மீட்டர் தூரத் துக்கு இந்த சாலை அமைக் கப்பட உள்ளது. இதற்காக புலிக்குன்றத்தில் 32 ஹெக் டேர் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 43 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலம் சித்தூரில் 83 கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப் படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை ரூ. 3,200 கோடி செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பு பணிக்காக புலிக் குன்றம் வனப்பகுதியில் 32 ஹெக்டேர் நிலம், சாலை யோரம் உள்ள பகுதியில் 886 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.

    64 சதவீதம் விவசாய நிலம், 15 சதவீதம் தரிசு நிலம், 10 சதவீதம் வனப் பகுதி நிலம் வழியாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப் படுகிறது.

    மத்திய-மாநில அரசு களின் அனுமதியின் பேரில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

    இந்த பசுமை வழிச்சாலையால் சென்னை - ஆந்திராவுக்கு கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து எளிதில் நடைபெறும் துறை முகங்களுக்கு சரக்குகள் ஏற்றி இறக்கி செல்லும் பணிகள் விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×