search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை  - வெள்ளையன்
    X

    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை - வெள்ளையன்

    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை என வெள்ளையன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #vellaiyan

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.

    நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.  #vellaiyan

    Next Story
    ×