என் மலர்

    செய்திகள்

    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு
    X

    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியான முல்லைபெரியாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 155அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம்.

    தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. எனவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நீர்மட்டம் 133.60 அடியை எட்டியுள்ளது. அணையில் தண்ணீர் 130 அடியை எட்டும்போது துணைக்குழு ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி துணைக்குழுவினர் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அவர்கள் நீர்வரத்து, நீர்வெளியேற்றம், கசிவுநீர் அளவு, மதகுபகுதி, கேலரி பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்ததும் தேக்கடியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் இருமாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    இதில் தமிழக-கேரள அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது குழுவின் துணைத்தலைவர் ராஜேசிடம் கேரள பிரதிநிதிகள் கூறும்போது அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் 136 அடி உயரத்தை எட்டும் நிலையில் உள்ளது. இந்த உயரத்தை எட்டும்போது தண்ணீர் மதகுவழியாக வெளியேறும். இதனால் கேரளப்பகுதி கரையோரத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே தென்மேற்கு பருவமழையால் தற்போது கேரள மாநிலத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடவேண்டும்.

    இதற்கு தமிழக தரப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது.

    தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 142 அடிவரை தண்ணீர் தேக்க முடிவு செய்துள்ளது. அதற்கு சாதகமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்ககூடாது என்றனர். அப்போது துணைக்குழு தலைவர் ராஜேஷ் இருதரப்பினரையும் சமரசம் செய்தார். அதனைதொடர்ந்து நீரின் அளவை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கூடலூரை சேர்ந்த பெரியாறு பாசன விவசாயசங்கத்தினர் துணைக்குழு தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கவும், தற்போது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை குறைக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
    Next Story
    ×