என் மலர்
செய்திகள்

உயிரிழந்த பாகன் கஜேந்திரனுடன் யானை மசினி
பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் யானைக்கு திடீர் உடல் நலக்குறைவு
பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் யானை மசினிக்கு காலில் ஏற்பட்ட நீர்க்கட்டியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மே மாதம் 24-ந்தேதி கோவில் பிரகாரத்தில் நின்றிருந்த யானை மசினி, பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்றது. இதையடுத்து யானையை கொட்டகைக்கு கொண்டு சென்று பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் யானையின் இடது காலில் வந்துள்ள நீர்க்கட்டியால் அவதியுற்று வந்தது. இதற்கு கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதையடுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை சிறப்பு மருத்துவர் கலைவாணன் யானை மசினியை பரிசோதனை செய்ய உள்ளார்.
அதன்பிறகு அவரது அறிவுறுத்தலின்படி ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக யானையை பராமரிக்கும் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story