என் மலர்

  செய்திகள்

  மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
  X

  மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #SouthernRailway
  சென்னை:

  சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மதியம் 12.55 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

  கடற்கரை-ஆவடி காலை 11.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

  திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையே இன்றும், திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10 மணி ரெயில்கள் 2 நாளும் மூர்மார்க்கெட்டுக்கு திருப்பிவிடப்படும்.

  வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.

  கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.

  ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு 2 நாட்களுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

  சென்னை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-கடற்கரை காலை 8.10 மணி முதல் இரவு 7.25 மணி வரை ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25, 1.45, 5.10 மணி ரெயில்கள் திருமால்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர்-கடற்கரை மதியம் 3.30 மணி ரெயில் மேல்மருவத்தூர்-தாம்பரம் இடையேயும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 7.25 முதல் மாலை 6.35 மணி வரை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  கடற்கரை-திருமால்பூர் காலை 7.05, 9.50, 1.30, 6 மணி ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும், கடற்கரை-மேல்மருவத்தூர் காலை 8.25 மணி ரெயில் தாம்பரம்-மேல்மருவத்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் நாளையும், நாளை மறுநாளும் (ஞாயிறு, திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9, 11.35 மணி ரெயில்கள் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9.30, 10.25 மணி ரெயில்கள் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 8.35 மணி ரெயில் மீஞ்சூர்-சூலூர்பேட்டை இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 9.55 மணி ரெயில் பொன்னேரி-சூலூர்பேட்டை இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 9.50, 10.50, 1.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 12.55 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10 மணி ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 11.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-பொன்னேரி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டி-கடற்கரை இரவு 9.40 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

  இந்த தகவல்களை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #SouthernRailway
  Next Story
  ×