search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 யூனிட்டுகள் நிறுத்தம் - தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    2 யூனிட்டுகள் நிறுத்தம் - தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அவை சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அதே போல் கடந்த 1-ந்தேதி 3-வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ஆகையால் அந்த யூனிட்டில் மின்உற்பத்தி செய்யப்படவில்லை. இந்த பணிகள் 15 நாட்கள் நடக்கிறது.

    இந்நிலையில் நேற்று 1-வது யூனிட் எந்திரத்தின் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் 1-வது யூனிட்டிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×