என் மலர்

  செய்திகள்

  வந்தவாசியில் அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதம் செய்த காட்சி.
  X
  வந்தவாசியில் அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதம் செய்த காட்சி.

  வந்தவாசியில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற பா.ஜனதாவினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வந்தவாசியில் மரபணு மாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாகண்ணுவிடம் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  வந்தவாசி:

  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் சென்னை கோட்டையில் நிறைவு பெறுகிறது.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

  செய்யாறில் பிரசாரம் செய்த அய்யாக்கண்ணு கூறியதாவது:-

  இயற்கை விவசாயத்தை அழித்து கார்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகின்றனர்.

  இதே நிலை நீடித்தால் மக்களின் அழிவு நிலை நீடிக்கும். செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதைத் தொடர்ந்து, வந்தவாசி பழைய பஸ் நிலையம், பஜார் தெரு, காஞ்சிபுரம் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர். தேரடி வீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க. நகரத் தலைவர் குருலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  மத்திய அரசை கண்டித்து நீங்கள் எப்படி துண்டு பிரசுரம் வழங்கலாம் என்று கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

  அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர் பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

  பின்னர் தொடர்ந்து அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

  கடந்த 14-ந் தேதி வேலூர் வந்த அய்யாக்கண்ணு பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் மோடி குறித்து விமர்சிக்க கூடாது என்று அய்யாக்கண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து தாக்க முயன்றனர்.

  சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரிலும் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக்கண்ணுவை தாக்கினார். அய்யாக்கண்ணு மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் விவசாய அமைப்பிகளுடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Next Story
  ×