search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    முதல் அமைச்சர் வருகையையொட்டி கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    கோவை:

    கோவை ரெயில் நிலையம் எதிரில் போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், விடுதலை புலிகள், சந்தன கட்டை கடத்தல் மன்னன் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகள், போலீஸ் ஆவணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் முதல்-அமைச்சரை வரவேற்கிறார்கள். பின்னர் கார் மூலம் ரெயில் நிலையம் எதிரே உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு வருகிறார். புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஊட்டி புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து விட்டு கார் மூலம் ஊட்டி செல்வதால் கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா தலைமையில் 1200 போலீ சாரும் புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் 800 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இன்று மாலை முதல் முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்படுகிறது. நாளை இரவு ஊட்டியில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×