என் மலர்

    செய்திகள்

    தக்கலை ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தீக்குளிக்க முயற்சி
    X

    தக்கலை ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தீக்குளிக்க முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தக்கலை ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டம் சுவாமியார் மடத்தை அடுத்த உண்ணாமலைக்கடையைச் சேர்ந்தவர் நரேந்திரசிங், (வயது 39).

    இவர், நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். அவர், சமீபத்தில் தக்கலை ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில், போலீஸ்காரராக வேலை பார்க்கும் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று கூறி இருந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து நரேந்திரசிங்கிற்கு தகவல் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று காலை நரேந்திரசிங் தக்கலை ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றார். அங்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அருகில் இருந்த போலீசார் நரேந்திரசிங்கை தடுத்து அவரது கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்தனர். பின்னர் அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×