என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளூர் பொருட்கள் விற்பனையை வணிகர்கள் ஊக்குவிக்க வேண்டும்- வெள்ளையன்
    X

    உள்ளூர் பொருட்கள் விற்பனையை வணிகர்கள் ஊக்குவிக்க வேண்டும்- வெள்ளையன்

    உள்ளூர் பொருட்கள் விற்பனையை வணிகர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கே.தேவராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அணைவரும் நமது பாரம்பரிய மிக்க விளைபாெருட்களையும், அவற்றிலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நமது உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் நமது வியாபாரம், விவசாயம் மற்றும் சுய தொழில்களை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

    முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட துனைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பி.கோபிநாத்தை வெள்ளையன் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் வருகிற மே 5-ம் தேதி வரும் 35-வது வணிகர் தினவிழாவை வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்டு மாநாடாக காஞ்சீபுரத்தில் கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரவையின் மாநில துணைபொது செயலாளர் கே.முருகன், மாவட்ட செயலாளர் கே.முருகன், வர்தக சங்க செயலாளர் ஜெ.தேவபிரகாஷ் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×