என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் கோவிலில் சிலை மாயம்
காஞ்சீபுரம் கோவிலில் சிலை திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கிழக்கு ராஜ வீதியில் பிரசித்திபெற்ற குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. கந்த புராணம் அரங்கேறிய இந்த கோவிலில் அதனை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரி யாருக்கு வெண்கல சிலை ஒன்று இருந்தது.
நேற்று முன்தினம் அந்த சிலை திடீரென மாயமானது. இதுபற்றி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து ஆய்வு மேற் கொண்டனர்.
சிலைகளுக்கு பொருப்பாக உள்ள கோவில் ஸ்தானிகர் சந்திரமவுலி என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து.
Next Story






