என் மலர்

  செய்திகள்

  தறிப்பட்டறைகளில் விடிய-விடிய வருமான வரித்துறையினர் சோதனை
  X

  தறிப்பட்டறைகளில் விடிய-விடிய வருமான வரித்துறையினர் சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செங்கோடு அருகே தறிப்பட்டறைகளில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
  திருச்செங்கோடு:

  திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியில் உள்ள அருள் முருகன் டெக்ஸ், வைரவேல் டெக்ஸ் ஆகிய 2 தறிப்பட்டறைகளில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

  தேவனாங்குறிச்சி சீனிவாசம் பாளையம் ரோட்டில் உள்ள அருள் முருகன் டெக்சில் ராஜேந்திரன் மற்றும் சின்னுசாமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இங்கு சுமார் 174 தறிகள் இயங்கி வருகின்றன. வைரவேல் டெக்சின் உரிமையாளர் வைரவேல் இங்கு 28 தறிகள் இயங்குகின்றன.

  இதுதவிர சுமார் 50-க்கும் மேற்பட்ட தறிகளுக்கு கூலி கொடுத்து நெசவு செய்து வருகின்றனர். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு 2 தறிப்பட்டறைகளுக்கும் சேலம், நாமக்கல்லை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் வந்து சோதனை மேற்கொண்டனர்.

  வைரவேல் டெக்சில் சுமார் 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு சுமார் 2 மணிவரை சோதனை நடந்துள்ளது. அருள் முருகன் டெக்சில் இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை விடிய-விடிய சோதனை நடத்தி உள்ளனர்.

  வைரவேல் டெக்சில் கணக்குளை சரி பார்த்த அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் எடுத்து செல்லவில்லை எனவும் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வருமான வரி கட்டி வரும் நிலையில் சோதனை ஏன் என தெரியவில்லை என்று தறிப்பட்டறை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதேபோல் அருள் முருகன் டெக்சில் சில கணக்கு புத்தகங்களை மட்டும் எடுத்து சென்றிருப்பதாகவும் வருமான வரி சரியாக செலுத்தி வரும் நிலையில் இந்த இந்த திடீர் சோதனை ஏன் என தெரியவில்லை ஊரியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. #tamilnews
  Next Story
  ×