search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர் பற்றி இன்று முடிவு எடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
    X

    அ.தி.மு.க. வேட்பாளர் பற்றி இன்று முடிவு எடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    தஞ்சாவூர்:

    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட 20 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்ய அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று எப்போது முடிவு செய்யப்படும் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வேட்புமனு பெறப்பட்டுள்ளது. நாளை (இன்று) ஆட்சி மன்றக்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் யார்? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    மூத்த நிர்வாகி என்ற முறையில் மதுசூதனனுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று நிர்வாகிகள் பலர் கூறினாலும், பாலகங்கா மற்றும் கோகுல இந்திரா எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று போர்க்கொடி பிடிப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    Next Story
    ×