என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப கொப்பரை ஒப்படைப்பு
  X

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப கொப்பரை ஒப்படைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பயன்படுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு, நேற்று சிறப்பு பூஜை செய்து அண்ணாமலையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

  விழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் டிசம்பர் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். அன்று முதல் 11 நாட்களுக்கு மகா தீபத்தை தரிசிக்கலாம். அதற்காக பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெற்ற 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

  மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரையை செப்பனிடும் பணியில், வருவதராஜ குல சமூகத்தை சேர்ந்த மண்ணு நாட்டார் தலைமையில் பாஸ்கர் உள்ட 5 பேர் ஈடுபட்டனர்.

  கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்து அண்ணாமலையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

  இது குறித்து பருவதராஜ குல சமுகத்தை சேர்ந்தவர்கள் கூறும் போது புதிய செம்பு கொப்பரை 5 அடி உயரம் கொண்டது. மேல் விட்டம் 39 அங்குலமும், கீழ் விட்டம் 27 அங்குலமும் உடையது. 250 கிலோ எடை கொண்டது. இந்த கொப்பரை 2-வது ஆண்டாக பயன்படுத்தப்படுகிறது. கொப்பரையை தயாரிக்கும் பணியில் கடந்த 31 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். இந்த பணியை சிவத் தொண்டாக செய்து வருகிறோம்“ என்றார்.

  இதையடுத்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். கோவில் யானைருக்கு வணங்கியதும். அண்ணாமலையின் உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்படும்.

  திருவண்ணாமலை அண்ணாமலையில் டிசம்பர் 2-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
  Next Story
  ×