என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான தொழிலாளியின் உடலை 6 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற உறவினர்கள்
    X

    விபத்தில் பலியான தொழிலாளியின் உடலை 6 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற உறவினர்கள்

    வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பிணத்தை எடுத்து செல்ல வாகன வசதி இல்லாததால், விபத்தில் பலியான தொழிலாளியின் உடலை 6 கிலோ மீட்டர் தூரம் உறவினர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று நடராஜன் வேதாரண்யம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலே நடராஜன் உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நடராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு பிணம் எடுத்து செல்லும் வாகன வசதி (அமரர் ஊர்தி) இல்லாததால் நடராஜனின் உடலை மருத்துவமனையில் உள்ள ஸ்டெச்சரில் வைத்து உறவினர்கள் தோளில் 6 கிலோ மீட்டர் தூரம் சுமந்து மணியன்தீவு கிராமத்துக்கு சென்றனர்.

    Next Story
    ×