என் மலர்

  செய்திகள்

  டாஸ்மாக் கடையில் மோதல்: 2 டிரைவர்கள் வெட்டி கொலை
  X

  டாஸ்மாக் கடையில் மோதல்: 2 டிரைவர்கள் வெட்டி கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதலில் 2 டிரைவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
  ஓசூர்:

  ஓசூரை அடுத்த கசுவ ஹட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி தனியார் பள்ளி பஸ் டிரைவர்.
  இவரும், சென்னத்தூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்கள் சுரேஷ் ரெட்டி, அம்ரேஷ் மற்றும் பத்தல பள்ளி பகுதியை சேர்ந்த விநாயகம் ஆகியோர் பணி முடிந்து நேற்று இரவு  பத்தல பள்ளி பகுதியில்  டாஸ்மாக் கடையில் மது குடித்தனர்.

  அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் விநாயகத்தை 3 பேரும் சேர்ந்து அடித்ததாக தெரிகிறது. காயம் அடைந்த விநாயகம் அங்கிருந்து புறப்பட்டு பஸ்சில் பத்தல பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
  இதையடுத்து சமாதானம் செய்ய சீனிவாச ரெட்டி, சுரேஷ் ரெட்டி, அம்ரேஷ் ஆகிய 3 பேரும் விநாயகத்தின்  வீட்டுக்கு சென்றனர்.  

  3 பேரையும் விநாயகம்  அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த அம்ரீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சுரேஷ் ரெட்டியும், சீனிவாச ரெட்டியும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த  2 பேரையும் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  பின்னர் அங்கிருந்து சுரேஷ் ரெட்டியை உறவினர்கள் பெங்களூருக்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு இரவு 12.30 மணி அளவில் சுரேஷ் ரெட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விநாயகத்தை கைது செய்தனர்.
  Next Story
  ×