என் மலர்
செய்திகள்

சிலை கடத்தி வந்து விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.
காரில் கடத்தப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பறிமுதல்
திருச்சி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து கடத்தப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விராலிமலை:
மதுரையில் இருந்து சென்னையை நோக்கி இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அந்த கார் சென்றது.
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், விராலிமலை ஊருக்குள் செல்வதற்காக கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் திரும்பிய போது, காரும், பஸ்சும் ஒன்றுக் கொன்று மோதிக்கொண்டன.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தனர். பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் காயமடைந்து காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை போலீசார் சோதனையிட்ட போது, அதற்குள் 8 கிலோ எடையுள்ள மரகதலிங்க சிலை இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர்கள் மரகத சிலைகளை கடத்தி வந்துள்ளதும், விராலிமலை அருகே வரும் போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார், அங்கு மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த சிலை கடத்தல்காரர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களது பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 4 பேரும் மரகத சிலைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள், அதனை எங்கு கொண்டு சென்றார்கள் என்ற விவரம் தெரியவரும்.
கடத்தல்காரர்கள் வந்த காரில் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர்களாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் திருச்சி-புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story