என் மலர்

  செய்திகள்

  பெருந்துறை அருகே கார் மோதி மொபட்டில் சென்ற விவசாயி பலி
  X

  பெருந்துறை அருகே கார் மோதி மொபட்டில் சென்ற விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெருந்துறை அருகே கார் மோதி மொபட்டில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான விவசாயிக்கு திருமணமான 2 மகள்கள் மற்றும் திருமணமாகாத ஒரு மகளும் உள்ளனர்.

  ஈரோடு:

  பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், சூர நாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 56). விவசாயியான இவர் சீனாபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது இவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவரது மொபட்டின் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

  அவரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காரை ஓட்டி வந்த சென்னிமலை ஒட்டவலசு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு செய்து பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  விபத்தில் பலியான விவசாயி ரங்கசாமிக்கு திருமணமான 2 மகள்கள் மற்றும் திருமணமாகாத ஒரு மகளும் உள்ளனர்.

  Next Story
  ×