என் மலர்
செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இந்திய கம்யூ. சார்பில் பாதயாத்திரை: தா.பாண்டியன்
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு வந்தார்.
அப்போது தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க அரசு முன் வர வேண்டும்.அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்று வதில் விவசாயிகள் இடையே குளறுபடி உள்ளது.
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசியல் கட்சியினரும், செல்வந்தர்களும் வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். இது தவறானது. எனவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் பழகுடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்குவதில் குளறுபடி உள்ளது. இதனால் அவர்கள் அரசு சலுகைகளை பெற முடியாமல் உள்ளனர்.
மணல் கொள்ளை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் அணை, குளத்தை தூர்வாரும் போது எடுக்கப்படும் மண் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படு வதில்லை.
எனவே மணல் கொள்ளையை தடுக்க கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.






