என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க இணைய ஓ.பி.எஸ். விரும்பினாலும் அவருடன் இருப்பவர்கள் சேர விட மாட்டார்கள்: தென்னரசு எம்.எல்.ஏ.
ஈரோடு:
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ தென்னரசு கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரே அணியாக அ.தி.மு.க. இணைய விருப்பம் இல்லை.
சசிகலா, தினகரன் இவர்கள் எல்லாம் வேண்டாம் என்கிறார். இவர்கள் இல்லாமல் எப்படி இணைப்பு நடக்கும்?
ஒருவேளை ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. அணிகள் இணைய விரும்பினாலும் அவருடன் இருக்கும் மைத்ரேயன், முனுசாமி, மா.ப.பாண்டியராஜன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் போன்றோர்கள் இணைய விட மாட்டார்கள்.
இவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு கருத்துக்களை கூறி அ.தி.மு.க. அணிகளை ஒருபோதும் இணைய விடாமாட்டார்கள். ஆகவே இனி அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு குறைவே.
இவ்வாறு தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.






