என் மலர்
செய்திகள்

நீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை
திருவாரூர் அருகே போதிய தண்ணீர் இல்லாமல் பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருவாரூர்:
வறட்சி, பருவமழை இல்லாமை, கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கருப்பணாமங்கலம கிராமத்தில் ரமேஷ் (வயது 46) என்ற விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் பயிரிட்டிருந்த பருத்தி பயிர், தண்ணீர் இல்லாமல் கருகியதாலும் கடன் சுமை காரணமாகவும் மனமுடைந்து தற்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயி ரமேஷ் தற்கொலை தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story