search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ நகராக மாறிய தி.நகர்
    X

    தீ நகராக மாறிய தி.நகர்

    சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தை 2-வது நாளாகியும் அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தை 2-வது நாளாகியும் அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டபோது சில மணி நேரங்களிலேயே தீ கட்டுக்குள் வந்து விடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிற்பகலுக்கு பின்னர் தீயின் வேகம் அதிகரித்தது.

    கரும் புகை அதிக அளவில் வெளியேற தொடங்கியதால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக கட்டிடத்துக்குள் சென்று தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் மாலைக்குள் தீயை எப்படியும் கட்டுப்படுத்தி விட வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இரவிலும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.

    இதனால் நேற்று இரவு தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் முழுவதும் கரும்புகை மண்டலம் ஏற்பட்டது. இதனால் தி.நகர் தீ நகராகவே காட்சியளித்தது.

    இந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் கட்டிடத்தின் மேலிருந்து 4 மாடிகள் இடிந்து கீழே விழுந்தது. இதனால் இன்று காலையில் சென்னை சில்க்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கூடுதல் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.



    தற்போது சென்னை சில்க்ஸ் கடையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தீயணைப்பு துறையினர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் தவிர பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புகை மூட்டம் கட்டுக்குள் இருந்த போதிலும் புகை நெடி மட்டும் அந்த பகுதி முழுவதும் காற்றில் கலந்துள்ளது.
    Next Story
    ×