search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மசாலா பாக்கெட்டில் செத்து கிடந்த கரப்பான் பூச்சி
    X

    கோவையில் மசாலா பாக்கெட்டில் செத்து கிடந்த கரப்பான் பூச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் மசாலா பாக்கெட்டில் கரப்பான் பூச்சி செத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் முகமது ரபி. இவர் நேற்று அருகில் உள்ள கடைக்கு சென்று முட்டை மசாலா பாக்கெட் வாங்கினார்.

    பின்னர் வீட்டுக்கு வந்து பிரித்து பார்த்தபோது முட்டை மசாலா பாக்கெட்டுக்குள் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த மசாலா பாக்கெட்டை பத்திரமாக வைத்திருந்தார்.

    இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளரை கரப்பான் பூச்சி இருந்த மசாலா பாக்கெட்டுடன் சந்தித்தார். அப்போது அவர் ஆய்வாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உணவு சம்பந்தமாக பாக்கெட்டில் விற்பனை செய்யும் பொ ருட்களுக்கு கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அனுமதி வாங்கி சந்தைப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருடத்திற்கு சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும். சோதனை விவரங்களை இணைய தளத்தில் வெளியிடவேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×