search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    116-வது ஜெயந்தி, 61-வது குருபூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    116-வது ஜெயந்தி, 61-வது குருபூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

    • 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதல் நாளான 28-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. அங்கு தமிழக அரசு சார்பில் தேவரின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாக நடைபெற்றது.

    இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    புதூர் செல்லும் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.40 மணிக்கு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×