search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    110 சாலையோர வியாபாரிகளுக்கு மோடி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கடன் உதவி- பா.ஜகவினர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது
    X

    110 சாலையோர வியாபாரிகளுக்கு மோடி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கடன் உதவி- பா.ஜகவினர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது

    • திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும்.
    • சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    சென்னை:

    சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பவர்கள், அயர்ன் கடை வைத்திருப்பவர்கள், இளநீர், கரும்பு ஜூஸ் போன்ற வியாபாரங்கள் செய்து வருபவர்கள் தண்டலுக்கு கடன் வாங்கி சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    இதை தவிர்த்து அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும். அதை முறையாக செலுத்தினால் 2-வது தவணையாக ரூ.20 ஆயிரமும், 3-வது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்ட பலன்கள் அவர்களை சென்றடைய பா.ஜனதாவினர் அவர்களுக்கு வங்கிகளில் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

    சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    கொளத்தூர், மாதவரம் தொகுதிகளில் 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் ராஜாகண்ணன், சஞ்சீவி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×