என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நார்வே செஸ் இன்று தொடக்கம்: முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரை சந்திக்கிறார் குகேஷ்
    X

    நார்வே செஸ் இன்று தொடக்கம்: முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரை சந்திக்கிறார் குகேஷ்

    • நார்வே செஸ் தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது.
    • உலகின் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    ஸ்டாவஞ்சர்:

    பிரசித்திப் பெற்ற நார்வே செஸ் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    நாளை தொடங்க உள்ள முதல் சுற்றில் இந்தியாவின் குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதுகிறார்.

    மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகேசி சீனாவின் வெய் யீ உடன் மோதுகிறார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, சக நாட்டு வீராங்கனையான ஆர்.வைஷாலி உடன் மோதுகிறார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×