என் மலர்
டென்னிஸ்

இத்தாலி நடிகரை 2-வது முறையாக திருமணம் செய்த வீனஸ் வில்லியம்ஸ்
- அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் திருமண நிகழ்ச்சிகள் 5 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது.
- வீனசை விட பிரெடி 8 வயது குறைவானவர்.
புளோரிடா:
அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 7 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இத்தாலி நடிகரும், மாடலிங் துறையை சேர்ந்தவருமான ஆன்ட்ரியா பிரெடியை காதலித்து வந்தார்.
கடந்த செப்டம்பரில் இவர்களது திருமணம் இத்தாலியில் எளிய முறையில் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வீனஸ்-ஆன்ட்ரியா பிரெடி மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் திருமண நிகழ்ச்சிகள் 5 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு புதுமணஜோடியை வாழ்த்தினர். பிரெடி, வீனசை விட 8 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






