என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ் உடன் மோதினார்.

    இதில் 4-6 என முதல் செட்டை இழந்த ரூனே அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×