என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா
    X

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதுகிறார்.

    Next Story
    ×