என் மலர்
டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற குடர்மெடோவா ஜோடி
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
- இரட்டையர் பிரிவில் 2வது முறையாக குடர்மெடோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
இதில் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா-பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் ஜோடி, பிரேசிலின் லூயிசா-ஹங்கேரியின் டைமியா பாப்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய குடர்மெடோவா ஜோடி 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
கடந்த 2022-ம் ஆண்டிலும் இதே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






