என் மலர்
விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி- ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
- பி.வி. சிந்து முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார்.
- அதன்பின் 12-21, 15-21 என 2-வது மற்றும் 3-வது கேம்களை இழந்தார்.
இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் துய் லிங் நகுயென்னை எதிர்கொண்டார். இதில் 68 நிமிடங்கள் போராடி பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களில் 12-21, 15-21 என தோல்வியை சந்தித்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தியாவின் மற்றொரு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 15-21, 21-6, 21-19 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மாளவிகா பன்சாத் சீன தைபேயின் யு போவை 21-18, 21-19 என வீழ்த்தினார்.
அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 3 ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தன.






