என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா, ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி - மழையால் ஆட்டம் பாதிப்பு
    X

    இந்தியா, ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி - மழையால் ஆட்டம் பாதிப்பு

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • இந்திய அணி 9.5 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×