என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 23 Sept 2023 7:41 AM IST

      குரூப் எப் பிரிவின் கீழ் பெண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் 2 செட்டை கைப்பற்றியது இந்தியா.


    • 23 Sept 2023 7:32 AM IST

      இந்தியா- நேபாளம் இடையே குரூப் எப் பிரிவின் கீழ் பெண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    • 23 Sept 2023 7:26 AM IST

      ஆண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியா- தஜிகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • 23 Sept 2023 7:25 AM IST

      தொடர்ந்து, ஆண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • 23 Sept 2023 7:23 AM IST

      பெண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    • 23 Sept 2023 7:22 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டியில், இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான முதல்நிலை டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது.

    • 23 Sept 2023 7:12 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டி 2023ல், கடந்த 21ம் தேதி நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட்டிற்கான ஆட்டத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • 23 Sept 2023 7:08 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டி 2023ல், கடந்த 19ம் தேதி நடைபெற்ற கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

    • 23 Sept 2023 7:01 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டி அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கப்படவுள்ள நிலையில், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது.

    • 23 Sept 2023 6:56 AM IST

      அணிவகுப்பில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.

    Next Story
    ×