என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 23 Sept 2023 9:31 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி 2023- ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.
- 23 Sept 2023 8:21 AM IST
ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா.
- 23 Sept 2023 8:14 AM IST
டேபிள் டென்னிஸ் பெண்கள் முதல்நிலை போட்டி- 3ல், முதல் செட்டில் 11-1 என்ற கணக்கிலும், 2வது செட்டில் 11- 5 என்ற கணக்கிலும் இந்தியா முன்னிலை.
- 23 Sept 2023 8:06 AM IST
டேபிள் டென்னிஸ் போட்டியில் நேபாளம் அணிக்கு எதிராக 2 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
- 23 Sept 2023 8:04 AM IST
டேபிள் டென்னிஸ் பெண்கள் முதல்நிலை போட்டி- 2ல் 3வது செட்டையும் 11- 2 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
- 23 Sept 2023 7:58 AM IST
2-வது செட்டை 11-7 என்ற கணக்கில் நேபாள வீராங்கனையை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை முகர்ஜி அய்ஹிகா.
- 23 Sept 2023 7:56 AM IST
பெண்கள் முதல்நிலை போட்டி 2: முதல் செட்டை இந்திய வீராங்கனை முகர்ஜி அய்ஹிகா 11-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
- 23 Sept 2023 7:46 AM IST
முதல் செட்டை 11 -1 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 11-6 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 11-8 என்ற கணக்கிலும் வீழ்த்தினார்.
- 23 Sept 2023 7:46 AM IST
நேபாள் வீராங்கனை சுவல் ஷ்ரேஸ்தா சிக்காவை 3-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை தியா பராக் வீழ்த்தினார்.






