என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 27 Sept 2023 8:30 AM IST
சிஃப்ட் சாம்ரா - ஆஷி சௌக்சே ஆகியோர் 50 மீ ரைபிள் 3 பி இன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர்.
- 27 Sept 2023 8:17 AM IST
50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவுக்கு இது 15வது பதக்கம் ஆகும்.
- 27 Sept 2023 7:57 AM IST
100மீ பட்டர்ஃபிளை போட்டியில் 17 வயது நினா வெங்கடேஷ் 1:03.89 வினாடிகளில் தனது ஹீட் 4வது இடத்தைப் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 14வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
- 27 Sept 2023 7:49 AM IST
வாள்வீச்சு: ஆண்கள் அணி 16வது ஃபாயில் சுற்று: தொடக்க சுற்றில் இந்தியா 30-45 என சிங்கப்பூரிடம் தோல்வியடைந்தது.
- 27 Sept 2023 7:35 AM IST
வுஷு போட்டி: ரோஹித் ஜாதவ் தாவோஷு இறுதிப் போட்டியில் 8-வது இடத்தைப் பிடித்தார்.
- 27 Sept 2023 7:31 AM IST
சீனா 56 தங்கம், 30 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தம் 99 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
- 26 Sept 2023 8:51 PM IST
வுஷூ ஆண்கள் 70 கிலோ காலிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் வீரரிடம் இந்திய வீரர் சுராஜ் தோல்வியை சந்தித்தார்.
- 26 Sept 2023 8:49 PM IST
குத்துச்சண்டை ஆண்கள் 92 கிலோ எடை 16வது ரவுண்ட் பிரிவில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் நரேந்தர் வென்றார்.
- 26 Sept 2023 8:14 PM IST
வுஷூ ஆண்கள் 60 கிலோ காலிறுதி சுற்றில் தென்கொரிய வீரரிடம் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சூர்ய பனு பிரதாப் சிங் தோல்வி.
- 26 Sept 2023 7:16 PM IST
ஆண்களுக்கான 4*100 மீட்டர் நீச்சல் மெட்லே ரிலே இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி 5வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தது. சீனா முதல் இடம் பிடித்து தங்கத்தை வென்றது.








