என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 27 Sept 2023 12:57 PM IST
கூடைப்பந்து: 3X3 ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியா 21-12 என்ற கணக்கில் மக்காவோ (சீனா)வை வீழ்த்தியது.
- 27 Sept 2023 12:47 PM IST
வாள்வீச்சு: பெண்கள் எபீ டீம் போட்டியில் இந்தியா 25-45 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வியடைந்தது.
- 27 Sept 2023 12:08 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா 6 பதக்கங்களை (2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் 25 மீ பிஸ்டல் மற்றும் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவுகளில் இந்திய மகளிர் அணி தங்கம் மற்றும் வெள்ளி வென்றது. மேலும் தனிபிரிவில் இந்திய வீராங்கனைகளான சிஃப்ட் கௌர் சாம்ரா தங்கமும், ஆஷி சோக்ஷிக் வெண்கலமும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் 50 பிரிவில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது. படகு போட்டியில் (sailing) ஆண்களுக்கான ILCA 7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கல பதக்கம் வென்றார்.
- 27 Sept 2023 12:07 PM IST
பெண்கள் ஆக்கி: இந்தியா தனது முதல் குரூப் நிலை மோதலில் 13-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
- 27 Sept 2023 11:17 AM IST
பெண்கள் ஆக்கி: 1வது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூருக்கு எதிராக 8-0 என முன்னிலை வகித்து வருகிறது.
- 27 Sept 2023 11:14 AM IST
ஸ்குவாஷ் ஆண்கள் அணி பிரிவு ஏ இந்தியா குவைத்தை 3-0 என வீழ்த்தியது. பெண்கள் அணி பிரிவு- பி நேபாளத்தை இந்தியா 3-0 என வீழ்த்தியது.
- 27 Sept 2023 11:12 AM IST
ப்ரிட்ஜ் போட்டியில் ஆண்கள் அணி ரவுண்ட் ராபின் 1-1ல் இந்தியா பிலிப்பைன்ஸை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் தாய்லாந்திடம் தோல்வி அடைந்தது. கலப்பு அணியில் இந்தியா வெற்றி பெற்றது.
- 27 Sept 2023 11:02 AM IST
படகு போட்டியில் (sailing) ஆண்களுக்கான ILCA 7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கல பதக்கம் வென்றார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 27 Sept 2023 10:56 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.











