என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 28 Sept 2023 11:15 AM IST

      டேபிள் டென்னில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 போட்டியில் இந்தியா- மாலத்தீவு மோதின. இதில், 3-1 என்ற செட் கணக்கில் மாலத்தீவை வீழத்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

      இதேபோல், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32ல் இந்தியா- மங்கோலியா மோதின. இதில், 3-0 என்ற செட் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

    • 28 Sept 2023 11:09 AM IST

      டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32ல் இந்தியா- நேபாளம் மோதின. இதில், 4-0 என்ற செட் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

    • 28 Sept 2023 10:51 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டி 2023ல், 6வது நாளாக இதுவரை நடந்த போட்டிகளில் 6 தங்கம் உள்பட 24 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

    • 28 Sept 2023 10:47 AM IST

      ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான குழு பூல் பி பிரிவு, போட்டி 1- போட்டி 43ல், இந்தியா- மலேசியா மோதின. இதில், இந்தியாவை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மலேசியா வென்றது.

    • 28 Sept 2023 9:50 AM IST

      நீச்சலில் பெண்களுக்கான 4X200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே போட்டியில், 4ம் இடம் பிடித்து இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    • 28 Sept 2023 9:45 AM IST

      நீச்சலில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே போட்டியில், 3ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

    • 28 Sept 2023 9:38 AM IST

      டேபிள் டென்னில் பெண்களுக்கான தனிநபர் ரவுண்ட் ஆப் 32 போட்டியில், 4-0 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வடகொரியா வென்றுள்ளது.

    • 28 Sept 2023 9:35 AM IST

      டேபிள் டென்னிஸ் ரவுண்ட் ஆப் 16ல் இரட்டையர் கலப்பு பிரிவில் இந்தியாவை வீழ்த்தி 3-2 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வென்றது.

    • 28 Sept 2023 9:30 AM IST

      துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் கலப்பு குழு போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது.

    • 28 Sept 2023 9:27 AM IST

      துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சராப்ஜோட் சிங் 4வது இடமும், அர்ஜூன் சீமா 8வது இடமும் பிடித்து ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×