என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 28 Sept 2023 5:11 PM IST

      இந்திய ஆண்கள் கால்பந்து அணி சவுதி அரேபியாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

    • 28 Sept 2023 4:41 PM IST

      ஸ்குவாஷ் ஆண்கள் அணி 3-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

    • 28 Sept 2023 4:23 PM IST

      டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சத்யன் ஞானசேகரன் மற்றும் சரத் கமல் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

    • 28 Sept 2023 4:12 PM IST

      ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடியான ராம்குமார் ராமநாதன் மற்றும் சகெத் மைனெனி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதி போட்டியில் இந்திய ஜோடி கொரிய வீரர்களை 6-1, 6-7, 10-0 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினர்.

    • 28 Sept 2023 3:55 PM IST

      டிரஸ்ஸேஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கிய முதல் வீரர் மற்றும் ஆசிய விளையாட்டில் டிரஸ்ஸேஜ் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுஷ் அகர்வல்லா பெற்று உள்ளார்.

    • 28 Sept 2023 2:50 PM IST

      குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் தனிநபர் போட்டியில் அனுஷ் அகர்வல்லா பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு அனுஷ் அகர்வல்லா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    • 28 Sept 2023 1:35 PM IST

      ஜிம்னாஸ்டிக்ஸ்-ல் பதக்கப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெளியேறினார்.

    • 28 Sept 2023 12:31 PM IST

      பாக்சிங்: பெண்களுக்கான 57- 60 கிலோ பிரிவு முதல்நிலை ஆர்16 போட்டியில் இந்தியா- சவுதி அரேபியா மோதின. இதில், 2வது சுற்றில் வென்ற இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • 28 Sept 2023 12:09 PM IST

      ஸ்குவாஷ் : பெண்களுக்கான டீம் பூல் பி போட்டி 3- போட்டி 43ல், 3-0 என்ற கேம் கணக்கில் மலேசியா வெற்றிப்பெற்றது.

      இதன்மூலம், ஸ்குவாஷ் பெண்களுக்கான டீம் பூல் பி போட்டியின் முடிவில் 3-0 என்ற புள்ளி கணக்கில் மலேசியா வெற்றிப்பெற்றுள்ளது.

    • 28 Sept 2023 11:25 AM IST

      ஸ்குவாஷ் பெண்களுக்கான டீம் பூல் பி-ல் போட்டி 2- போட்டி 43ல், 3-2 என்ற கேம் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி மலேசியா வென்றது.

    Next Story
    ×